சுவாமிமலையில் முருக பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05டிச 2012 11:12
கும்பகோணம்: கார்த்திகை சோமவாரத்தையொட்டி, கும்பகோணத்தில் இருந்து முருக பக்தர்கள் சுவாமிமலைக்கு பால் காவடி, பால் குடம் எடுத்துச் சென்று வழிபட்டனர். கும்பகோணம் ஏ.ஆர்.ஆர் சாலை, துவரங்குறிச்சி பகுதிகளைச் சேர்ந்த முருக பக்தர்கள், ஆண்டுதோறும் கார்த்திகை சோமவாரத்தன்று காவடி, பால் குடம் எடுத்து சென்று சுவாமிமலையில் வழிபடுவது வழக்கம்.அந்த வகையில் நேற்று முன்தினம், 46வது ஆண்டாக, 500 பக்தர்கள் பால் குடம், பால் காவடி எடுத்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். துவரங்குறிச்சி அரசலாற்றங்கரை ஆபத்து காத்த விநாயகர் கோவிலிலிருந்து, புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சுவாமிமலையை சென்றடைந்தனர். இதையொட்டி, 2ம் தேதி துவரங்குறிச்சி நடுத்தெருவில் காவடி அபிஷேக பூஜைகள் நடந்தது. நேற்று இடும்பன் பூஜை நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.