Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் ... கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் சனி சிறப்பு வழிபாடு கோவை கொடிசியா திருப்பதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹிந்துக்கள் மட்டுமே திருமலை கோயிலில் பணியாற்ற வேண்டும்: சந்திரபாபு நாயுடு
எழுத்தின் அளவு:
ஹிந்துக்கள் மட்டுமே திருமலை கோயிலில் பணியாற்ற வேண்டும்: சந்திரபாபு நாயுடு

பதிவு செய்த நாள்

22 மார்
2025
12:03

திருமலை : ஹிந்துக்கள் மட்டுமே திருமலை கோயிலில் பணியாற்ற வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். கடந்தாண்டு ஆந்திர சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து திருமலையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் ஹிந்துக்களாக இருக்க வேண்டும், என, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் தலைவர் பி.ஆர்.நாயுடு கடந்தாண்டு நவம்பரில் அறிவித்தார். இந்நிலையில் தனது பேரனின் பிறந்த நாளையொட்டி குடும்பத்துடன் திருமலை கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளதாவது: நாட்டின் அனைத்து மாநில தலைநகரங்களிலும் வெங்கடேஸ்வர சுவாமிக்கு கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒத்துழைப்பு கோரி அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுத உள்ளேன். இக்கோயிலில் ஹிந்துக்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும். ஹிந்துக்கள் அல்லாத பிற மதத்தவர்கள் பணியாற்றி வந்தால் அவர்கள் வேறு பணிக்கு மாற்றப்படுவார்கள். ஏழுமலையான் வெங்கடேஸ்வர சுவாமியும் அதன் புனிதத்தன்மையும் பாதுகாக்கப்பட வேண்டும். கோவிலில் புனிதமற்ற செயல்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தேவஸ்தான வாரியத்தின் உறுப்பினர்களின் தலையாய கடமை. இவ்வாறு அவர் கூறினார்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar