Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூவாகம் கூத்தாண்டவர் கோவில் ... மேலக்கொடுமலூர் குமரக்கடவுள் முருகனுக்கு 108 சங்காபிஷேகம் மேலக்கொடுமலூர் குமரக்கடவுள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

30 ஏப்
2025
08:04

திண்டுக்கல்; திண்டுக்கல் காளஹஸ்தீஸ்வரர், அபிராமி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திண்டுக்கல் காளஹஸ்தீஸ்வரர், அபிராமி அம்மன், பத்மகிரீஸ்வரர் கோயில் சித்திரைப் பெருவிழா ஆண்டுதோறும் 12 நாள்கள் நடைபெறுவது வழக்கம். 


அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதை யொட்டி கோயில் கொடிகம்பம், கோயில் வளாகம் முழுவதும் மலர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. காலை 6:00 மணிக்கு கணபதி , ரிஷப ஹோமம் யாக சாலை பூஜைகள் முடிய கொடிமரத்திற்கு 16 வகை அபிஷேகம் நடந்தது.இதை தொடர்ந்து சிவவாத்தியங்கள் முழங்க கொடி கம்பத்தில் கொடியேற்ற சிறப்பு பூஜை நடந்தது. இதன் பின் ஞானாம்பிகை -காளகத்தீசுவரர், அபிராமி அம்மன்- ,பத்மகிரீசுவரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அறங்காவலர் குழு தலைவர் வேலுச்சாமி, உறுப்பினர்கள் வீரக்குமார், சண்முகவேல், மலைச்சாமி, நிர்மலா, இணை ஆணையர் கார்த்திக், செயல் அலுவலர் தங்கலதா, தாடிக்கொம்பு கோயில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி, சீனிவாச பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் மாரிமுத்து , திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் . தினமும் பல்வேறு வாகனங்களில் அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் எழுந்தருள ரத வீதிகளில் உலா வருதல் நடக்கிறது . விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மே 8ல் திருக்கல்யாணம், மறு நாள் தேரோட்டம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar