பதிவு செய்த நாள்
30
ஏப்
2025
08:04
உளுந்தூர்பேட்டை; கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவின் துவக்கமாக 7 கிராம மக்கள் கூழ் குடங்களுடன் ஊர்வலமாக வந்து வழிபட்டு சாகை வார்த்தலுடன் விழா துவங்கியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா துவங்கியது. நேற்று மாலை 4 மணிளவில் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. இந்த சாகை வார்த்தல் விழாவில் கூவாகம், தொட்டி, நத்தம், வேலூர், அண்ணாநகர், கொரட்டூர், சிவலியாங்குளம் உள்ளிட்ட 7 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கூழ் குடங்களுடன் ஊர்வலமாக வந்து கோவிலில் படையலிட்டு வழிபாடு செய்தனர். பின்னர் தேங்காய் உடைத்து தீபாராதனை வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். திருவிழா சாகை வார்த்தல் விழாவுடன் துவங்கியது. இன்று(30ம் தேதி) பந்தலடியில் தாலி கட்டுதல் (பாரதம் ஆரம்பம்) நிகழ்ச்சி நடக்கிறது. நாளை(1ம் தேதி) சந்தனு சரிதம், இரவு 10 மணிக்கு சுவாமி புறப்பாடும், 2ம் தேதி பீஷ்மர் பிறப்பும், இரவு சுவாமி புறப்பாடும், 3 ம் தேதி தர்மர் பிறப்பும் இரவு சுவாமி புறப்பாடும், 4ம் தேதி பாஞ்சாலி பிறப்பும், இரவு சுவாமி புறப்பாடும், 5ம் தேதி பகாசூரம் வதம், இரவு சுவாமி புறப்பாடும், 6ம் தேதி பாஞ்சாலி திருமணமும், இரவு சுவாமி புறப்பாடும், 7 ம் தேதி கூத்தாண்டவர் பிறப்பும், இரவு சுவாமி புறப்பாடும், 8 ம் தேதி இராஜசுய யாகம், இரவு சுவாமி புறப்பாடும், 9ம் தேதி விராடபர்வம், வெள்ளிக்கால் நடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 10ம் தேதி கிருஷ்ணன் தூது, இரவு சுவாமி புறப்பாடும், 11ம் தேதி காலை அரவான்பலி, கூத்தாண்டவர் சுவாமிக்கு பாலாலயம் நடக்கிறது. 12ம் தேதி மாலை கம்பம் நிறுத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. , 13ம் தேதி இரவு சுவாமி திருக்கண் திறத்தல், திருநங்கைகள், பக்தர்கள் திருமாங்கல்யம் ஏற்றுக் கொள்ளுதல் (தாலி கட்டுதல்) நிகழ்ச்சி நடக்கிறது. 14ம் தேதி காலை 6.30 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தை உளுந்தூர்பேட்டை தொகுதி மணிக்கண்ணன் எம்..எல்.ஏ., துவக்கி வைக்கிறார். மாலை பந்தலடி பாரதம் படைத்தல், இரவு காளி கோவிலில் உயிர் பெறுதல் நிகழ்ச்சியும், 15ம் தேதி விடையாத்தி, 16ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.