Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யோக நரசிம்ம சுவாமியின் உற்சவ ... முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் திருபவித்ரோத்சவ விழா முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடிவெள்ளி, மடப்புரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
எழுத்தின் அளவு:
ஆடிவெள்ளி, மடப்புரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2025
05:07

திருப்புவனம்; ஆடி மாதம் பிறக்க உள்ள நிலையில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக தடுப்புகள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று. தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் ஆடி வெள்ளி கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதும், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் சார்பில் கோயில் முன்புறம், கோயில் வாசல் உள்ளிட்ட இடங்களில் தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தடுப்புகளில் உள்ள பக்தர்கள் தாகம் தீர்க்க பல இடங்களில் சுத்திகர்க்கப்பட்ட குடிநீர் வசதி, வெயில் காலம் என்பதால் பக்தர்கள் நடக்க ரப்பர் விரிப்புகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. பக்தர்கள் கூறுகையில் :


ஆடி வெள்ளிகிழமை வர உள்ள நிலையில் கோயில் நிர்வாகம் சார்பில் தடுப்புகள், தற்காலிக உண்டியல்கள் உள்ளிட்டவைகள் அமைத்து வருகின்றனர். ஆனால் பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதே இல்லை. அம்மன் முன்புறம் உள்ள சிலைகள் சேதமடைந்த நிலையில் அவற்றை சரி செய்ய பாலாலயம் நடந்து ஆறு மாதத்திற்கு மேலாகியும் இன்று வரை பணிகள் மேற்கொள்ளப்படாமல் சேதமடைந்த சிலைகளின் மீது வேட்டி, சேலையை அலங்காரமாக சுற்றி வைத்துள்ளனர். கடந்த ஜூன் 28ல் கோயில் அருகே உள்ள கோசாலையில் அஜித்குமார் என்ற வாலிபரை போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார், கோயில் அருகே சம்பவம் நடந்து 12 நாட்கள் ஆகியும் இன்று வரை பரிகார பூஜைகள் செய்யவே இல்லை. இளம் வயது கொடூர மரணம் என்ற நிலையில் பரிகார பூஜைகள் செய்திருக்க வேண்டும், உண்டியல் வருவாயை மட்டும் நினைக்கும் நிர்வாகம், பரிகார பூஜைகள் விரைந்து நடத்த வேண்டும், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருப்பதியில் உள்ள புண்ணிய க்ஷேத்திரத்தில் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி மஹாபாதுகா மண்டபத்தில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்:திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், பவித்ர உத்சவம் 6ம் தேதி துவங்கி, வரும் 13ம் தேதி வரை ஏழு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் சந்திர கிரகணம் முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சந்திர கிரகணத்திற்குப் பிறகு கோவில் நடை இன்று திறக்கப்பட்டன.திருமலையில் ... மேலும்
 
temple news
கோவை; சாதுர்மாஸ்ய பூஜை மற்றும் சாதுர் மாதம் விரதத்தை ஸ்ரீ சக்கர மகாமேருபீடம் பிலாஸ்பூர்ஸ்ரீ சக்கர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar