Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ... அயோத்தியில் புதிய ஹனுமத் பாதை வழித்தடம்; பக்தர்கள் மகிழ்ச்சி அயோத்தியில் புதிய ஹனுமத் பாதை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டியில் சண்டிகேஸ்வரர் சப்பரத்திற்கு பதிலாக புதிய தேர்; நாளை வெள்ளோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பிள்ளையார்பட்டியில் சண்டிகேஸ்வரர் சப்பரத்திற்கு பதிலாக புதிய தேர்; நாளை வெள்ளோட்டம்

பதிவு செய்த நாள்

19 ஆக
2025
05:08

திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் சதுர்த்திப் பெருவிழா தேரோட்டத்தில் சண்டிகேஸ்வரருக்கு புதிய தேருக்கான வெள்ளோட்டம் நாளை காலை நடைபெறுகிறது.


நகரத்தார் கோயிலான இங்கு சதுர்த்திப் பெருவிழா பத்துநாட்கள் நடைபெறும். இவ்விழாவில் 9ம் திருநாளில் நடைபெறும் தேரோட்டத்தில் கற்பகவிநாயகர் தேரிலும், சண்டிகேஸ்வரர் சப்பரத்திலும் எழுந்தருளி தேரோட்டம் நடைபெறும். சப்பரத்தில் வரும் சண்டிகேஸ்வரரை பெண் பக்தர்களே உற்சாகமாக வடம் பிடித்து செல்வர். தற்போது சப்பரத்திற்கு பதிலாக சண்டிகேஸ்வரருக்கு புதிய தேர் செய்யப்பட்டுள்ளது. புதிய தேர் இன்று கோயில் ராஜகோபுரத்திற்கு முன்னதாக பீட ஸ்தானத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டு பூஜைகள் நடந்தன. 


நடப்பு காரியக்காரர்கள் காரைக்குடி சித.பழனியப்பச் செட்டியார், நச்சாந்துபட்டி மு.குமரப்பச் செட்டியார் ஆகியோர் கூறுகையில்,‛ திருக்கோயில் நிதித் திட்டத்தின் கீழ் ரூ 25 லட்சம் மதிப்பில் புதிய தேர் செய்யப்பட்டுள்ளது. அதற்கான வெள்ளோட்டம் நாளை காலை 9:00 மணி முதல் 10:00 மணிக்குள் நடைபெறும்’ என்றனர். சதுர்த்தி விழாவில், நாளை மூன்றாம் திருநாளில் காலை 9:30 மணிக்கு வெள்ளிக் கேடகத்தில் சுவாமி புறப்பாடும், இரவு 8:30 மணிக்கு சுவாமி பூதவாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar