கும்பகோணத்தில் இருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ளது ஆடுதுறை என்னும் திருவாவடுதுறை. நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் தன் தந்தையின் யாகத்திற்கு பொருள் வேண்டி இங்குள்ள மாசிலாமணீஸ்வரரை வேண்டி பதிகம் பாடினார். சிவபெருமானும் இங்குள்ள பலிபீடத்தில் ஆயிரம் பொற்காசுகள் தினமும் கிடைக்கும் என அருள்புரிந்தார். அப்பாடல்களை தினமும் மாலையில் விளக்கேற்றி பாடினால் வறுமை நீங்கும். செல்வம் பெருகும். சேமிப்பு கூடும்.