Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி கோவிலில் மூன்று மணி நேரம் ... பூதத்தாழ்வார் ஜெயந்தி மாமல்லபுரத்தில் விமரிசை பூதத்தாழ்வார் ஜெயந்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் கும்பாபிஷேக விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் கும்பாபிஷேக விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

01 நவ
2025
12:11

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் உள்ள, சின்ன மேலமையூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது.


செங்கல்பட்டு, சின்ன மேலமையூர் பிள்ளையார் கோவில் தெருவில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் உள்ளது. கடந்த 16 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் திருப்பணிகள் துவங்கி, சில நாட்களுக்கு முன் முடிந்தன. இதையடுத்து, சின்ன மேலமையூரில் உள்ள மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட கும்பாபிஷேக விழா, கடந்த 28ம் தேதி, குருபூஜையுடன் துவங்கி, வேள்வி பூஜைகள் நடந்தன. இதைத்தொடர்ந்து, நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க பெருந்தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் கோபுர கலசத்திற்கு, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர் செந்தில்குமார் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஆதிபராசக்தி அம்மனுக்கு, லட்சுமி பங்காரு அடிகளார் அபிஷேகம் செய்து, தீபாராதனை காட்டி பூஜை செய்தார். இதில், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர் அன்பழகன், மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி எழிலரசி, அரசு சிறப்பு வழக்கறிஞர் கனகராஜ், செங்கல்பட்டு முதன்மை மாவட்ட நீதிமன்ற அரசு வழக்கறிஞர் திருமுருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில், செவ்வாடை பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க, செங்கல்பட்டு மாவட்ட தலைவர் வேலு மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar