அகத்தீஸ்வரர் கோவிலில் அகத்திய முனிவருக்கு ஆயில்யம் நட்சத்திர சிறப்பு அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10டிச 2025 05:12
கிளார்: கிளார் அகத்தீஸ்வரர் கோவிலில் உள்ள அகத்திய மாமுனிவருக்கு, இன்று ஆயில்யம் நட்சத்திர சிறப்பு அபிஷேகம் நடந்தது.
காஞ்சிபுரம் அடுத்த கிளார் கிராமத்தில், அறம்வளர் நாயகி சமேத அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அகத்திய மாமுனிவர், அம்பிகை உலோபமுத்திரையுடன் ராஜ அலங்காரத்தில் தனி சன்னிதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அகத்திய முனிவர் அவதரித்த ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி கார்த்திகை மாத ஆயில்ய நட்சத்திரமான நேற்று, அகத்தியருக்கும், உலோப முத்திரை அம்பிகைக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பள்ளி மாணவ -– மாணவியர் அகத்தியரின் 108 போற்றியை ஒன்றாக இணைந்து பாராயணம் செய்தனர்.