வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2025 10:12
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜையில், ராகு கால பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தேய்பிறை அஷ்டமி ராகு கால பூஜையில் முன்னதாக வாராகி அம்மனுக்கு திரவிய அபிஷேகங்களும், பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து கோவிலில் நாக தேவதைக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் சங்கல்பம் செய்து தேங்காயில் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். தேய்பிறை அஷ்டமி பூஜையை வாராகி அறக்கட்டளை தலைவரும், வரசித்தி வாராகி அம்மன் திருக்கோயில் பீடாதிபதியுமான சஞ்சீவி சாமிகள் நடத்தி வைத்தார். யாக பூஜையில் வரசித்தி வாராகி அம்பாள்மகாலட்சுமி சொரூபமாக காட்சி தந்தார்.இதில் திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்களுக்கு கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அன்னதான காணிக்கை வழங்கினர். வாராகி அறக்கட்டளை சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.