காஞ்சி காமாட்சி அம்மனுக்கு தங்க ஒட்டியாணம் அணிவித்து வழிபட்ட விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜன 2026 12:01
காஞ்சிபுரம்: காஞ்சி காமாட்சி அம்மனுக்கு தங்க ஒட்டியாணம் அணிவித்து விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழிபட்டார்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு திருவையாற்றைச் சேர்ந்த பக்தர் காணிக்கையாக வழங்கிய ஒட்டியாணத்தை புதன் கிழமை காஞ்சி சங்கரமடத்தின் பீடாதிபதிகள் அணிவித்து சிறப்பு தீபாராதனையும் செய்தனர்.காஞ்சி சங்கராச்சாரியர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஒட்டியாணத்தை வழங்கிய சங்கர நாராயணன் தம்பதி. தங்கத்தில் கற்கள் பதித்த ஒட்டி யாணத்தை திருவையாற்றைச் சேர்ந்த பக்தர் சங்கர நாராயணன் குடும்பத்தினர் அளித்தனர். அதனை காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடா திபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் சமர்ப்பித்தார். தொடர்ந்து சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரும் காமாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று அம்மனுக்கு ஒட்டியாணத்தை அணிவித்து சிறப்பு தீபாராதனை செய்து வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.