கோவை ராம் நகர் ஐயப்பனுக்கு புத்தாண்டு சிறப்பு பூஜை; கனகாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜன 2026 12:01
கோவை; ராம் நகர் ஐயப்பன் பூஜா சங்கம் 75 ஆம் ஆண்டு உற்சவம் நிறைவு நாள் நிகழ்வாக நேற்று இரவு சிறப்பு பஜனை பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது . இரவு 12-01 மணியளவில் ஆங்கில புத்தாண்டு 2026 பிறப்பை முன்னிட்டு சுவாமி ஐயப்பனின் திரு உருவ சிலைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. ஆங்கில புத்தாண்டு பிறப்பு பூஜையுடன் விழா இனிதே நிறைவடைந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக சுவாமிக்கு கனகாபிஷேகம் செய்யப்பட்ட காசுகள் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டது.