Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயில்களில் ... நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 3 டன் மலர்களால் அபிஷேகம்: தங்கக்கவசத்தில் அருள்பாலிப்பு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 3 டன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலுாரில் ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கடலுாரில் ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

01 ஜன
2026
05:01

கடலுார்: கடலுாரில் ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்கள் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


ஆங்கில புத்தாண்டையொட்டி கடலுாரில் நேற்று இரவு முதல் பொதுமக்கள் கேக் வெட்டியும், வண்ண மயமான வான வேடிக்கைகள் மூலமும் புத்தாண்டை கொண்டாடினர். இன்று காலை திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில், ஆங்கில புத்தாண்டையொட்டி அதிகாலை 5 மணி முதல் பொதுமக்கள் பெருமாளை தரிசனம் செய்தனர். கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில், நேற்று காலை பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் விநாயகர், சுப்ரமணியர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பொதுமக்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.


திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பாதிரிப்புலியூர் வீரஆஞ்சநேயர் கோவில்களில் அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.  செம்மண்டலம் சாந்த ஆஞ்சநேயர் கோவிலில் 26அடி உயர சாந்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் மஞ்சக்குப்பம் செல்வ விநாயகர் கோவில், புதுப்பாளையம் தரைகாத்த காளியம்மன் கோவில், இரட்டைப்பிள்ளையார் கோவில், சுப்பிரமணியசுவாமி கோவில், வண்டிப்பாளையம் சிவசுப்பிரமணியசுவாமி கோவில், முதுநகர் ஐந்துகிணற்று மாரியம்மன் கோவில் உட்பட கடலுாரில் உள்ள கோவில்களில் ஆங்கில புத்தாண்டையொட்டி நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar