திருப்பரங்குன்றம் கோயில்களில் சுவாமிகளுக்கு வெள்ளி கவசம் சாற்றி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜன 2026 05:01
திருப்பரங்குன்றம்: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோயில் மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், துர்க்கை, பவளக்கனிவாய் பெருமாள், ஆஸ்தானம் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள கருப்பண்ண சுவாமிக்கு வெள்ளிக்கவசம் சாத்துப்படியாகி சிறப்பு பூஜை நடந்தது. விளாச்சேரி பூமி நீளா வெங்கடேசப் பெருமாள் கோயிலில் மூலவர்களுக்கு சந்தன காப்பு அலங்காரமாகி பூஜை நடந்தது. எஸ்.ஆர்.வி. நகர் கொல்கட்டா காளி அம்மன் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. ஸ்ரீ சக்ர திரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ராஜசியாமளா மகா வராஹி அம்மன் கோயிலில் மூலவர் வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், பூஜை நடந்தது.