Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இது தான் உண்மையான விளக்கம்! சுப்ரபாதத்தை போனில் ரிங்டோனாக ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஒரு கோடியை வீணாக்கலாம்! ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காதே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2013
02:01

*எல்லாவற்றுக்கும் அப்பால் ஒரு சக்தி இருக்கிறது. அதுதான் கடவுள். அதனைச் சொற்களால் விளக்க முடியாது. அனைத்திற்கும் மூலகாரணமாக விளங்குவது அதுவே.
*கடவுள் இல்லை என்று சொல்வது, பேச்சுக்கு ஆதாரமான நாக்காலேயே எனக்கு நாக்கு இல்லை என்று சொல்வது போலாகும். விதைக்குள் மரமும், பாலில் வெண்ணெயும் இருப்பது போல கடவுள் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறார்.
*கடவுளைச் சரணாகதி அடைந்து விட்டால் உலகில் ஒருவருக்கும் அஞ்சத் தேவையில்லை. அவர் ஒருவரே உங்களுக்குத் தேவையான அனைத்தையும் பார்த்துக் கொள்வார்.
*ஒரு கோடி ரூபாயை வீணாக்கினாலும் வருத்தப்படத் தேவையில்லை. ஆனால், ஒருநிமிட நேரத்தைக் கூட வீணாக்கக்கூடாது. காலம் பொன் போன்றது. காலமறிந்து கடமையாற்றுங்கள்.
*இன்று நண்பனாக இருப்பவன், நாளை எதிரியாகி விடலாம். ஆனால் என்றென்றும் நம்பிக்கைக்குரிய ஒரே நண்பன் கடவுள் மட்டுமே.
*கடவுளை நம்புவதால் நமக்குத் தான் லாபம். நம்மால் கடவுளுக்கு என்ன ஆகப்போகிறது? ஆனால், நாம் அவரை அடைக்கலம் புகுந்துவிட்டால் மனதில் நிம்மதி உண்டாகும்.
*நீங்கள் கொண்டிருக்கும் இறைநம்பிக்கை முழுமையானதாக இருந்தால், மனதில் அன்பும் அருளும் பிறக்கும். அப்போது பிற உயிர்களின் மீது இரக்கம் உண்டாகும்.
*ஆன்மிக உலகில் எத்தனையோ நூல்கள் பரந்து விரிந்து கிடக்கின்றன. அவை அனைத்தும் நமக்குத் தேவையில்லை. அவற்றின் சாரமான கருத்துக்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
*தொடக்கத்தில் கடவுள் மீது பயமும் பக்தியும் வேண்டும். காலம் செல்லச் செல்ல பயம் காணாமல் போய்விடும். அன்பு மயமான பக்தி மட்டும் நிறைந்திருக்கும்.
*மனம் கடவுள் வசமாகி விட்டால் ஆணவம், அகங்காரம் போன்ற மனமாசுகள் நம்மை விட்டு விலகிவிடும்.
*எந்தச் செயலையும் சிரத்தையுடன் கவனமாகச் செய்யுங்கள். இல்லாவிட்டால் அந்தச் செயல் பயனற்றதாகி விடும். எந்தச் செயலலையும் அற்பமானது என்று அலட்சியம் காட்டாதீர்கள்.
*எப்போதும் இறைசிந்தனையுடன் இருப்பவனே கர்மயோகி. அவன் செய்யும் ஒவ்வொரு செயலிலும், எண்ணத்திலும் இறைவனையே காணும் பேறு பெறுவான்.
*இறைவனின் திருநாமங்களே மந்திரம். மந்திரம் ஜெபிப்பதன் நோக்கம் மனத்தூய்மை அடைவதேயாகும். இறைவனைத் திருப்திப்படுத்துவது அல்ல.
*கடல் அலைகளைக் கட்டுப்படுத்த கரை இருப்பது போல, மனதில் தோன்றும் எண்ண அலைகளைக் கட்டுப்படுத்தவே விரதம் மேற்கொள்கின்றனர்.
*எங்கு சென்றாலும் மனதிற்குள்பிரார்த்தனைசெய்வதை விட்டு விடாதீர்கள். இது சாத்தியமில்லாவிட்டால் ஆன்மிக நூல்களை வாசியுங்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
குபேரன் சாந்தகுணம் உடையவர். ஒருவன் செல்வந்தன் ஆவதற்கு சாந்த குணமே (பொறுமையுடன் பணி செய்தல்) தேவை என்பதை ... மேலும்
 
செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. அட்சயதிரிதியை நாளில் குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
பால், தேன், தாமரை, தானியம், நாணயம் ஆகியவை லட்சுமிக்குரியவை. இவற்றை பஞ்சலட்சுமி திரவியங்கள் என்று ... மேலும்
 
இலங்கைக்கு அதிபதியாக குபேரன் இருந்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் செல்வவளத்துடன் வாழ்ந்தனர். அவனை ... மேலும்
 
குபேரனின் நிஜப்பெயர் வைச்ரவணன். பதவியால் ஏற்பட்ட பெயர் குபேரன். ஏகாஷிபிங்களி என்றும் பெயருண்டு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar