Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ... காளஹஸ்தி சிவன் கோவிலில் மொரீஷியஸ் அதிபர் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் காளஹஸ்தி சிவன் கோவிலில் மொரீஷியஸ் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வேடுபறி உற்சவம்; பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வேடுபறி உற்சவம்; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

07 ஜன
2026
10:01

திருச்சி; ஸ்ரீரங்கத்தில், தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள் வேடுபறி உற்சவம் நடந்தது.


திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி உற்சவம், திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. சொர்க்கவாசல் திறப்பு உற்சவத்தை தொடர்ந்து நம்பெருமாள் கைத்தல சேவையும், ஆயிரங்கால் மண்டபம் முன் அமைந்த மணல் வெளியில், திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம் நடைபெற்றது. அப்போது, தங்கக் குதிரை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி வையாளி கண்டருளினார். திருமாலுக்கு தொண்டுகள் செய்த திருமங்கை மன்னன், தன்னிடம் இருந்த பெரும் பொருள்களை செலவு செய்தார். தன்னிடம் பொருள் இல்லாமல் போனதால், கைங்கர்யத்தை தொடர்ந்து செய்வதற்காக, வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டார். அதனால், ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற நாமத்தை உபதேசித்து, நம்பெருமாள் அவரை ஆட்கொண்ட வைபம் தான் வேடுபறி உற்சவம். ராப்பத்து உற்சவத்தின் 10ம் நாளில், தீர்த்தவாரியும், அடுத்த நாள் நம்மாழ்வார் மோட்சம், இயற்பா சாற்றுமுறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar