காளஹஸ்தி சிவன் கோவிலில் மொரீஷியஸ் அதிபர் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2026 10:01
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் மொரீஷியஸ் அதிபர் ஸ்ரீ தரம் பீர் கோகுல், தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு ஸ்ரீகாளஹஸ்தி சட்டமன்ற உறுப்பினர் பொஜ்ஜல. சுதீர் ரெட்டி தம்பதியினர் மற்றும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் கொட்டே. சாய் பிரசாத், கோயில் செயல் அதிகாரி டி. பாபிரெட்டி, பாஜக மாநில துணைத் தலைவர் கோலா ஆனந்த் மற்றும் கோயில் அதிகாரிகள் அவர்களை சிறப்பு வரவேற்பு அளித்து, சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர்.
காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்த மொரீஷியஸ் ஜனாதிபதிக்கு கோயில் வளாகத்தில் உள்ள தஷிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்தப் பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர். மேலும் கோயில் வேதப் பண்டிதர்கள் சிறப்பு வேத ஆசிர்வாதமும் செய்தனர். இந்த நிகழ்ச்சயில் கோயில் துணை செயல் அலுவலர் என்.ஆர் கிருஷ்ணா ரெட்டி, மற்றும் வித்யாசாகர் ரெட்டி, மோகன், ஏ.பி.ஆர்.ஓ ரவி ஆகியோர் பங்கேற்றனர்.