Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் மொரீஷியஸ் அதிபர் ... பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள், ஸ்டிக்கர் வழங்க வேண்டுகோள். பாதயாத்திரை செல்லும் முருக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகளந்த பெருமாள் கோவிலில் பனிப்போர்வை அணிந்து ஆஸ்தானம் எழுந்தருளிய தேகளீச பெருமாள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உலகளந்த பெருமாள் கோவிலில் பனிப்போர்வை அணிந்து ஆஸ்தானம் எழுந்தருளிய தேகளீச பெருமாள்

பதிவு செய்த நாள்

07 ஜன
2026
02:01

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி இராபத்து உற்சவத்தில் பெருமாள் பனிப் போர்வை போர்த்தி ஆஸ்தானம் எழுந்தருளினார்.


திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை தொடர்ந்து இராப்பத்து உற்சவம் கடந்த 30ம் தேதி துவங்கியது. விழாவின் 8ம் நாளான நேற்று மாலை 6:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, கோவிலை வலம் வந்து, உடையவர் சன்னதியில் மண்டகபடி நடந்தது. தொடர்ந்து பரமபத வாசல் எனும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, நம்மாழ்வார் எதிர்கொண்டு சேவிக்க பரமபதம் மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார். இரவு 8:00 மணிக்கு திருவாய்மொழி, சேவை சாற்றுமறை, தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் நடந்தது. தேகளீச பெருமாள் மெல்லிய இழை கொண்ட போர்வையால் திருமுகம் தெரிய போர்த்தப்பட்டு ஆஸ்தானம் எழுந்தருளினார். சிறப்பான இக்காட்சியைக் காணும் பக்தர்களுக்கு பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீதேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில், கோவில் ஏஜென்ட் கோலாகளன் மேற்பார்வையில் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar