பதிவு செய்த நாள்
05
ஜன
2013
10:01
காஞ்சிபுரம்: செவிலிமேடு ராமானுஜர் கோவிலில், அனுஷ்டான குள உற்சவம், நேற்று வெகு விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடில், ராமானுஜர் கோவில் உள்ளது. இவ்விடத்தில் வழிதெரியாமல் தவித்த ராமானுஜருக்கு, வரதராஜப் பெருமாள், தாயாருடன், வேடுவன் வேடத்தில் காட்சி அளித்ததாகவும், தாகம் தீர்க்க பெருமாள், அனுஷ்டான குள சாலைக்கிணறை உருவாக்கியதாகவும், புராணங்கள் கூறுகின்றன. ராமானுஜருக்கு வரதராஜப் பெருமாள் காட்சி அளித்ததை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி முடிந்த 12ம் நாள், அனுஷ்டான குள உற்சவம் கொண்டாடப்படுகிறது. அனுஷ்டான குள உற்சவம் நேற்று நடந்தது. உற்சவத்தையொட்டி வரதராஜப் பெருமாள், உற்சவர் ராமானுஜருடன், நேற்று காலை 10:30 மணிக்கு, கோவிலிலிருந்து புறப்பட்டு, செவிலிமேடில் உள்ள ராமானுஜர் கோவிலை சென்றடைந்தார். அங்கு சாலைக்கிணறு தீர்த்தத்தில், பெருமாளுக்கும், ராமானுஜருக்கும் திருமஞ்சனம் நடந்தது. தீபாரா தனைக்கு பிறகு பிரசாதம் வினியோகம் நடந்தது. மாலை 3:00 மணிக்கு, பெருமாள் வேடுவர் வேடத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இவ்விழாவில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.