Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கங்காதீஸ்வரர் கோவிலில் திருவாசகம் ... திருத்தணி முருகன் கோவிலில் தை கிருத்திகை விழா கோலாகலம் திருத்தணி முருகன் கோவிலில் தை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காமாட்சிபுரி ஆதினம் சக்தி பீடத்தில் குண்டம் விழா திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
காமாட்சிபுரி ஆதினம் சக்தி பீடத்தில் குண்டம் விழா திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

28 ஜன
2026
12:01

கோவை: காமாட்சிபுரி ஆதினம், 51 சக்தி பீடத்தில் நடந்த குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி பரவசமடைந்தனர்.


கோவை காமாட்சிபுரி ஆதினம் 51 சக்தி பீடம் அலங்காரி அங்காளபரமேஸ்வரி அன்னையின் 45ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் மற்றும் குண்டம் திருவிழா கடந்த 22ம் தேதி துவங்கியது. விநாயகர் வேள்வி, 108 விநாயகர் பூஜை, கோமாதா பூஜையுடன் திருவிழா ஆரம்பித்தது. காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில், அம்மன் அபிஷேகம், அலங்கார வழிபாடு, கருப்பராயர் பூஜை, கன்னிமார் பூஜை, வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல், முளைப்பாரி இடுதல், மஹா சரஸ்வதி வேள்வி, புஷ்ப பல்லக்கு உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக குண்டம் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவை முன்னிட்டு, திருக்கல்யாணம், குண்டத்துக்கு பூ இடுதல், குண்டத்துக்கு அக்னி இடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். நோயில் இருந்து குணமடைந்தவர்கள், மூடிய குண்டத்தில் உப்பு செலுத்தி வழிபட்டனர். உலகில் அமைதி நிலவவும், மக்கள் நிறைவாக வாழவும், பல்வேறு பூஜைகள் தினமும் நடத்தப்பட்டன. நேற்று மஞ்சள் நீர் உற்சவம், அம்மன் திருவீதி உலா, மகா அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பக்தர்கள் அம்மன் அருள் பெற்றனர். நிறைவு நாளான இன்று பரிவேட்டை, குதிரை வாகன உற்சவம், மகிஷாசூரன் வதம், விளக்கு வழிபாடு, அம்மன் தரிசனம், காமதேனு வாகன உற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 
temple news
தேவகோட்டை: கோட்டூர் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி முளைக்கொட்டு திருவிழா 23ம் தேதி காப்புக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar