காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தெப்போத்சவம் விமரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02பிப் 2026 01:02
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணியையொட்டி நேற்று முதல் நாள் தெப்போத்சவம் விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் தெப்ப குளத்தில் ஆண்டு தோறும், தை பவுர்ணமியன்று தெப்போத்சவம் துவங்கி, தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான முதல் நாள் தெப்போத்சவம் நேற்று துவங்கியது. இதில், நேற்று இரவு 7:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார் மற்றும் பெருந்தேவி தாயாருடன், வரதராஜ பெருமாள் ‛அனந்தசரஸ்’ என அழைக்கப்படும் தெப்ப குளத்தில் எழுந்தருளி, மூன்று முறை வலம் வந்தார். இரண்டாம் நாளன்று இன்று ஐந்து முறையும், தெப்போத்ற்சவம் நிறைவு நாளான நாளை, ஏழு முறையும் தெப்ப குளத்தில் வரதராஜ பெருமாள் வலம் வருவார். தெப்போத்சவத்திற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.