Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேட்டுப்பாளையத்தில் ஹிந்து குடும்ப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் மகாசிவராத்திரி; த்ரிசூல ஸ்நானம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் மகாசிவராத்திரி; த்ரிசூல ஸ்நானம்

பதிவு செய்த நாள்

04 பிப்
2026
12:02

ஸ்ரீகாளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் 1ம் தேதி .சொர்ணமுகி ஆற்றில் சத்வோமுக்தி  விரதப் பூஜைகள், த்ரிசூல ஸ்நானம், மகாசிவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்கியது. இந்த விழாவிற்கு ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் சொர்ணமுகி ஆற்றில் நீராடினர்.  இந்த விழா இந்த ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி வந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஏராளமான பக்தர்கள் இதில் இந்த உற்சவத்தில் கலந்து கொண்டனர்.  கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி சமிக்ஞைகள் அனுப்பப்படுகின்றன.


சத்யோமுக்தி உத்சவம்: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நடைபெறும் விழாக்களில், மகா சிவராத்திரிக்கு முன் நடைபெறும் மிகப்பெரிய விழா திரிசூல ஸ்நானம் ஆகும். இந்த விழா மகாசிவராத்திரி பிரம்மோத்சவத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. சுவர்ணமுகி நதிக் (கரையில்)  இந்த விழா நடத்துவது வழக்கம். (தமிழகத்தில் மாசி மகம், தைப்பூசம் ,மாசி மாத பௌர்ணமி) அன்று ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அருகில் உள்ள சொர்ணமுகி ஆற்றில் திரிசூல ஸ்நானம் நடைபெறுவது வழக்கம் முன்னதாக  கோயிலில் (காலை ) மூலவர்களுக்கு ஞானப்பிரசுனாம்பிகை   சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கு  இன்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகளை நடைபெற்றதை  தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளான ( சாமி - அம்மையார்கள்  பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், பக்த கண்ணப்பர், சண்டிகேஸ்வரர்) சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மேள தாளங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க கோயிலில் இருந்து ஊர்வலமாக சொர்ணமுகி ஆற்றின் (கரையில்) கொண்டு சென்றனர்.


அங்கு கோயில் அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டப் பகுதியில் தேவஸ்தான வேதப் பண்டிதர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். முன்னதாக சிறப்பு கலசம் ஏற்பாடு செய்யப்பட்டு சத்வோமுக்தி விரதப் ( கதை)  பூஜைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரளான ( பெண் ) பக்தர்களுடன் கோயில் வேதப் பண்டிதர்கள் த்ரிசூலத்தை சொர்ணமுகி ஆற்றில் புனித நீராடினர். இதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு (நந்தி வாகனத்தில் ஸ்ரீ காளஹஸ்தீஷ்வரரும் ஞானப் பிரசுனாம்பிகை தாயார் சிம்ம வாகனத்திலும், மூஷிக வாகனத்தில் விநாயகர், சப்பரத்தில் வள்ளி தேவயானை சமேத சுப்பிரமணிய சுவாமி மற்றும் பக்த கண்ணப்பர், சண்டிகேஸ்வரர்) பஞ்ச மூர்த்திகள் சன்னதி வீதி வழியாக நகரில் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வழக்கமாக ஒவ்வொரு நதிக்கும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நதி புஷ்கரணி நடப்பது வழக்கம் ஆனால் சொர்ணமுகி ஆற்றிற்கு ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் புஷ்கரணி தீர்த்தம் என்றும், த்ரிசூல ஸ்நானம் என்றும் இந்த சிறப்பு உற்சவத்திற்கு பக்தர்களிடையே சிறப்பு வரவேற்பும் நம்பிக்கையும் உண்டு என்பதால் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் மேலும் இதில் கோயில் செயல் அலுவலர் பாபி ரெட்டி தம்பதியினர், தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கொட்டே சாய் பிரசாத் தம்பதியினர் மற்றும் தேவஸ்தான துணை செயல் அதிகாரி மோகன், கிருஷ்ணா ரெட்டி மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 
temple news
கருமத்தம்பட்டி; விராலிக்காடு சென்னியாண்டவர் கோவிலில் தைப்பூச தரிசன விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar