உடுமலை: சுண்ணாம்பு மற்றும் கரித்துகளை பயன்படுத்தி, தேர் வரைந்து, தைப்பூச திருவிழாவை பாரம்பரிய முறையில் பில்லவநாயக்கன் சாளையூர் கிராம மக்கள் கொண்டாடினர்.
உடுமலை எரிசனம்பட்டி அருகே அமைந்துள்ள கிராமம் பில்லவநாயக்கன் சாளையூர். கிராமத்தில், ஆடிப்பெருக்கு மற்றும் தைப்பூசம் பாரம்பரிய முறைப்படி கொண் டாடப்படுகிறது. தைப்பூசத்தையொட்டி, சுண்ணாம்பு துகள், கரித்துகளை பயன்படுத்தி, தேர்க்கோலமிட்டு, அருகில் முருகனின் மயில், வேல், யானை தேரை இழுக்கும் வகையில் அழகிய ஓவியங்களாக வரைந்தனர். பின்னர், விநாயகர் கோயிலுக்கு அனைத்து பிரசாதங்களும் எடுத்துச் சென்று வழிபாடு நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப் படுகிறது. தேர் வரையப்பட்ட இடத்தில் தேவராட்டம், கும்மி, சிறு சிறு பாரம்பரிய விளையாட்டுகள் ஆகியவை நடைபெற்று விழா கொண்டாட்டமாக நிறைவடைந்தது.