Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயில் ... அரசியல்வாதிகள், போலீஸ் கட்டுப்பாட்டிற்கு போகும் கோவில்கள்; வேடிக்கை பார்க்கும் அறநிலையத்துறை அரசியல்வாதிகள், போலீஸ் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை ஐயப்பன் கோவில் நெய் விற்பனை மோசடி; தேவஸ்தான அதிகாரி கைது
எழுத்தின் அளவு:
சபரிமலை ஐயப்பன் கோவில் நெய் விற்பனை மோசடி; தேவஸ்தான அதிகாரி கைது

பதிவு செய்த நாள்

05 பிப்
2026
03:02

பத்தினம்திட்டா: சபரிமலை நெய் விற்பனை மோசடி வழக்கில் உதவி அர்ச்சகரும், தேவஸ்தான அதிகாரியுமான சுனில்குமாரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் நெய் அபிஷேகத்திற்காக விற்கப்படும் அடியா சிஷ்டம் நெய் விற்பனையில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கேரள உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய விசாரணையில், நெய் விற்பனையில் முறைகேடு மற்றும் கையாடல் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.


லஞ்ச ஒழிப்புத்துறையினரின் அறிக்கையின்படி, பக்தர்களுக்கு 89,129 நெய் பாக்கெட்டுகள் விற்பனை செய்ததன் மூலம் தேவஸ்வம் போர்டுக்கு ரூ.89.12 லட்சம் வருவாய் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் 27ம் தேதி நடத்தப்பட்ட ஆய்வில், ரூ.75.45 லட்சம் மட்டுமே செலுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதன் மூலம் முதற்கட்டமாக ரூ.13.67 லட்சம் முறைகேடு நடந்துள்ளது. பின்னர், மண்டலப் பூஜைக்காக டிசம்பர் 27ம் தேதி கோவில் நடை அடைத்த பிறகு, 28,550 நெய் பாக்கெட்டுகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. ஆனால், ஜனவரி 2ம் தேதி ஆய்வு நடத்திய போது, 5,985 பாக்கெட்டுகள் மட்டும் இருந்துள்ளன. இதனால், 22.56 லட்சம் அளவிலான நெய் பாக்கெட்டுகளை விற்று, கையாடல் செய்தது உறுதியாகியுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் உதவி அர்ச்சகர்கள் உள்பட 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலின் உதவி அர்ச்சகரும், செய் விற்பனை பொறுப்பு அதிகாரியுமான சுனில்குமார் பொட்டியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர். இதன்மூலம், 13 நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, சுனில் குமாரை பணியிடை நீக்கம் செய்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மாசி மாத பிரம்மோத்சவத்தையொட்டி நேற்று பந்தகால் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சேஷாத்திரி  ஆசிரமத்தில்,  சேஷாத்திரி மகானின் 156 ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar