Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மங்கலம்பேட்டையில் ராமநவமி ஊர்வலம்: ... ‘பராபவ’ வருட பஞ்சாங்கம் வெளியீடு ‘பராபவ’ வருட பஞ்சாங்கம் வெளியீடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர உத்சவம் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர உத்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

27 மார்
2026
04:03

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர உத்சவம் நேற்று துவங்கியது.


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், பெருந்தேவி தாயார் திருஅவதார நட்சத்திரமான பங்குனி உத்திரத்திற்கு, பங்குனி உத்திர உத்சவம் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி ஆண்டுதோறும் ஏழு நாள் பங்குனி உத்திர உத்சவம் நடை பெறும். அதன்படி, நடப்பாண்டுக்கான உத்சவம் நேற்று துவங்கியது. முதல் நாள் உத்சவமான நேற்று மாலை 6:00 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, மலையாள நாச்சியாருடன் திருவடிகோவில் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, திருவடிகோவிலில் இருந்து புறப்பாடாகி கோவிலில் உள்ள நுாற்றுகால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு ஊஞ்சல் சேவை உத்சவம் விமரிசையாக நடந்தது. இரவு 7:00 மணிக்கு திருவாராதானம், நிவேதனம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு பெருமாள், மலையாள நாச்சியார் கண்ணாடி அறையில் எழுந்தருளினர்.


பங்குனி உத்திர திருக்கல்யாண உத்சவ தினமான வரும் ஏப்.,1ம் தேதி, காலை 8:30 மணிக்கு, தாயார் சன்னிதியில் பெருந்தேவி தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனமும், விசேஷ மலர் அலங்காரமும், பெருமாள், உபயநாச்சியாருக்கு திருமஞ்சனமும் நடக்கிறது. மாலை 6:30 மணிக்கு பெருமாள், தாயார், மலையாள நாச்சியார் திருவடிகோவில் புறப்பாடாகி, நான்கு கால் மண்டபத்தில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா நடக்கிறது. இதில், பெருமாளுக்கும், மலையாள நாச்சியாருக்கும் மாலை மாற்றும் வைபவம் விமரிசையாக நடக்கிறது. தொடர்ந்து, கண்ணாடி அறையில் தரிசன தாம்பூலமாகி, தாயார் சன்னிதிக்கு வந்தடைவார். தொடர்ந்து ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் சிறப்பு நிகழ்வான, பெருமாள், ஆண்டாள், ஸ்ரீதேவி, பூதேவி, மலையாள நாச்சியார், தாயார் சன்னிதியில் எழுந்தருளும் தாயார் சேர்த்தியறை சேவை நடக்கிறது. ஏப்., 2ம் தேதி கந்த பொடி வசந்தம் உத்சவம் நடக்கிறது. இதில், கண்ணாடி அறையில் பெருமாள், உபயநாச்சியாருக்கு திருமஞ்சனம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு மாடவீதி புறப்பாடு நடக்கிறது. உத்சவத்திற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar