Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் ...  மயிலாப்பூர் கபாலீஸ்வரர் தேரோட்டம் கோலாகலம்; நமச்சிவாய கோஷத்துடன் பக்தர்கள் பரவசம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் தேரோட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் ராமர், சீதா திருக்கல்யாணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடியில் ராமர், சீதா திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

29 மார்
2026
09:03

பரமக்குடி: பரமக்குடி புனித புளி ஆஞ்சநேயர் கோயில் ராமநவமி விழாவில் ராமர், சீதா திருக்கல்யாணம் நடந்தது.

பரமக்குடி நகராட்சி எதிரில் ஆஞ்சநேயராக புனித புளிய மரத்தை பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். அருகில் ராமர், சீதா, லட்சுமணன் சன்னதி உள்ளது.

இங்கு ராம நவமி விழாவையொட்டி கொடி மரத்தில் கருட கொடி ஏற்றப்பட்டது.

தினமும் பல்வேறு வாகனங்களில் ராமர் உலா வருகிறார். புத்திர காமேஷ்டி யாகம் நடந்தது. அப்போது குழந்தை வேண்டி விரதம் இருந்தவர்களுக்கு பாயாசம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

தொடர்ந்து ராமநவமி விழாவும், நேற்று காலை சங்கர மடத்திலிருந்து ராமர் மாப்பிள்ளை திருக்கோலத்தில் கோயிலை அடைந்தார்.

பின்னர் மதியம் 12:00 மணிக்கு சீதா, ராமர் திருக்கல்யாணம் மகா மண்டபத்தில் நடந்தது. அப்போது ஏராளமான பெண்கள் தரிசனம் செய்து திருமாங்கல்ய கயிற்றை மாற்றிக் கொண்டனர்.

விவாக சடங்குகள், மாலை மாற்றல் நடந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

இரவு பல்லக்கில் சுவாமிகள் பட்டணப்பிரவேசம் சென்றனர். இன்று தீர்த்தவாரி, கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.

நாளை ஆஞ்சநேயர் அபிஷேகம் மற்றும் திருவீதி உலா நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்ட னர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar