Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைசாக அமாவாசை: பிரயாக்ராஜ் திரிவேணி ... திருவொற்றியூர் வட்டப்பாறை அம்மன் கோவிலில் 7 நாள் உத்சவம் நிறைவு திருவொற்றியூர் வட்டப்பாறை அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆகாசராயர் கோவிலுக்கு குதிரையை சுமந்து சென்ற பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆகாசராயர் கோவிலுக்கு குதிரையை சுமந்து சென்ற பக்தர்கள்

பதிவு செய்த நாள்

17 ஏப்
2026
04:04

அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு,சின்னகருணை பாளையத்திலிருந்து ஆகாசராயர் கோவிலுக்கு 500க்கும் மேற்பட்ட மக்கள் குதிரையை சுமந்து ஊர்வலமாக சென்றனர்.


கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதாகவும், ஆசியாவில் மூன்றாவது பெரிய தேர் என பெருமை கொண்டதாகவும் விளங்கும் ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா வரும் 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.  கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை அவிநாசி அருகே உள்ள சின்ன கருணைபாளையம் பகுதி கிராம மக்கள் அவிநாசி மங்கலம் ரோட்டில் ராயன் கோவில் காலனி பகுதியில் எழுந்தருளியுள்ள ஆகாசராயர் கோவிலுக்கு மலர்களால் அலங்கரித்த குதிரையை சப்பரத்தில் கட்டி அப்பகுதி இளைஞர்கள் தோளில் சுமந்தபடி பெரிய கருணைபாளையம், கவுண்டன்பாளையம், கோவை சேலம் பைபாஸ் ரோடு ,ராயன் கோவில் காலனி வழியாக ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.  குதிரையைச் சுமந்து ஊர்வலமாக வரும்பொழுது,ஆங்காங்கே சப்பரத்தை சுமந்து வரும் இளைஞர்களுக்கு தண்ணீர் ஊற்றியும் குடிநீர் மோர் மற்றும் குளிர்பானம் ஆகியவை வழங்கியும் உற்சாகத்துடன் வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து ஆகாசராயருக்கு பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar