ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2026 10:04
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இக்கோயிலில் ஏப். 6 காலை கொடியேற்றத்துடன் பூக்குழி திருவிழா துவங்கியது. தினமும் இரவு 8:00 மணிக்கு மேல் சிறப்பு அலங்காரத்தில் சந்தன மாரியம்மன் வீதியுலா நடந்தது 12 நாள் திருநாளான நேற்று மதியம் பக்தர்கள் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து சந்தன மாரியம்மன் தரிசித்தனர். பின்னர் 3:45 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர். கோயிலில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக அம்மன் வீதி உலா நடந்தது. திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர். டி.எஸ்.பி. பாலச்சந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.