நெட்டப்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2026 10:04
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.
நெட்டப்பாக்கம் கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர், பாண்டுரங்கன், திரவுபதியம்மன், பிடாரியம்மன், அய்யனாரப்பன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 10ம் தேதி துவங்கியது. அன்று மதியம் 12:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி, மாலை 2:30 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்து வழிபாடு, இரவு 8:00 மணிக்கு பிடாரியம்மன், அய்யனாரப்பன் சுவாமி வீதியுலா நடந்தது. திருவிழாவையொட்டி, தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்து வந்தது. கடந்த 15ம் தேதி இரவு 8:00 மணிக்கு அர்ச்சுனர் – திரவுபதியம்மன் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று பகல் 12:00 மணிக்கு அரவான் களபலி மற்றும் கோட்டை அழித்தல் நிகழ்ச்சி, மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.