Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்மன் மீது சூரிய ஒளிக்கதிர்: ... கள்ளழகராக வராகநதி கரையோரம் எழுந்தருளிய வரதராஜப் பெருமாள் கள்ளழகராக வராகநதி கரையோரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்க பெருமாள் கோயில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
 ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்க பெருமாள் கோயில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

01 மே
2026
07:05

ஆண்டிபட்டி: ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப் பெருமாள் கோயில் சித்திரைத்திருவிழா தேரோட்டம் நடந்தது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 22-ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 12 நாட்கள் நிகழ்ச்சியில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் கோயில் வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்ச்சியின் 9ம் நாளான நேற்று முன் தினம் சுவாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன் திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. நேற்று மாலை 5:45 மணிக்கு பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். கோயில் வளாகத்தில் இருந்து மெயின் ரோடு, ஜம்புலிப்புத்தூர் வீதி வழியாக சென்ற தேர் சுவாமி ஓய்வு பெறும் நிகழ்வுக்காக பாதி வழியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இன்று மாலை மீண்டும் தேரோட்டம் துவக்கப்பட்டு கோயில் வளாகத்தில் நிலைநிறுத்தப்படும். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சுதா தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூ. 2.10 கோடி செலவில் புனித நீராடும் பாதையை புதுப்பிக்கும் ... மேலும்
 
temple news
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் அம்மன் கோவிலில் நேற்று நடந்த தேரோட்டத்தில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar