தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு திருவாவடுதுறை ஆதீனம் வாழ்த்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மே 2026 10:05
மயிலாடுதுறை: திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலமான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது இயற்றலும் ஈட்டலும் காத்தலுங் காத்து வகுத்தலும் வல்ல(து) அரசு என்ற திருக்குறளுக்கு இணங்க தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் அவர்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவிக்கும் மகிழ்கிறோம். முதல்வர் ஜோசப் விஜய் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருக்குறள் தொடரை தன் கொள்கையாக கொண்டிருப்பது போற்றத்தக்கது. அதனால் கோவிலுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது என்னும் அப்பர் பெருமான் திருவாக்குக்கிணங்க எல்லா தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கும் நல்லாட்சி மலரும் என்பதில் ஐயமில்லை. தங்களின் தலைமையில் சிறப்பான ஆட்சித் திறனால் தமிழ்நாடு மென்மேலும் பல முன்னேற்றங்களை பெற்று செழிக்க வேண்டுமென நமது ஆன்மார்த்த மூர்த்திகளாகிய ஸ்ரீ ஞானமா நடராஜ பெருமான் திருவடி மலர்களை சிந்தித்து வாழ்த்துகிறோம் என தெரிவித்துள்ளார்.