சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மே 2026 10:05
சிதம்பரம்: தில்லை காளியம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சிதம்பரம், தில்லை காளியம்மன் கோவிலில், இந்தாண்டு வைகாசி திருவிழா கடந்த, 7ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் விநாயகர், தில்லைகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும், மாலையில் பல்வேறு வாகனத்தில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. கடந்த, 11ம் தேதி தெருவடைச்சான் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக, தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி, காலை தில்லை காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து வடக்கு வீதியில் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்மன் எழுந்தருளினார். இதையடுத்து மாலை தேரோட்டம் புறப்பட்டு, முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் வடக்கு வீதிக்கு வந்தடைந்தது.
பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து இன்று தீர்த்தவாரி நிகழ்ச்சியும், நாளை மஞ்சள் நீராட்டு விழா மற்றும் முத்துப்பல்லக்கில் அம்மன் வீதிஉலாவும், 18 ம் தேதி தெப்ப உற்சவமும் நடக்கிறது. வரும், 19ம் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் வைகாசி திருவிழா முடிவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலை துறை உதவி ஆணையர் சிவகுமார் ,கோவில் செயல் அலுவலர் நரசிங்க பெருமாள், கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.