Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சமுத்திர நீராடல், திருத்தலயாத்திரை ... எட்டுக்கை ரகசியம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தன்னம்பிகை கொண்டவவே ஆத்திகவாதி உற்சாகப்படுத்துகிறார் விவேகானந்தர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2013
03:01

*நாம் செலுத்தும் பணிவுக்கும், மரியாதைக்கும் பிரதிபலனாக கடவுள் ஏதாவது நன்மை தரவேண்டும் என்று எதிர்பார்க்கும்வரை உண்மையான பக்தி ஏற்படாது.
*கடைநிலையில் வாழும் மனிதனுக்கும் உணவு கிடைக்கவேண்டும். பசித்தவனுக்கு உணவளிப்பது தான் என்னுடைய ஆன்மிகம். அதை தவிர மற்றதெல்லாம் பொய்யே.
*அரசியல், சமுதாயத்தில் சுதந்திரத்தை நாம் பெற்றிருக்கலாம். ஆனால், ஆத்திரம், ஆசை இவற்றுக்கு அடிமையாக இருக்கும் வரை சுதந்திரக்காற்றை சுவாசிக்க முடியாது.
*இந்த உலகம் பெரிய உடற்பயிற்சி சாலை. நாம் அனைவரும் வலிமையுள்ளவர்களாக்கிக் கொள்ளவே இங்கு வந்திருக்கிறோம்.
*நீங்கள் உலகில் பிறந்திருப்பது வெல்தற்காகவே. வெறும் கோழைத்தனத்தால் யாருக்கும் பணிந்து போவதற்கு அல்ல.
*நம்முடைய வழிபாட்டில் கடவுளை நம் தாய் தந்தையராக ஒப்புக் கொள்கிறோம். ஆனால். அன்றாட வாழ்விலோ நாம் சந்திக்கும் அனைவரையும் எதிரிகளாக நினைக்கிறோம்.
*உயிர்கள் அனைத்தும் கடவுளின் பிள்ளைகள் என்பது உண்மையானால் நாம் காணும் மனிதர்கள் எல்லாருமே நம் சகோதரர்கள் என்பதும் நிஜம் தானே!
*அந்தக்காலத்தில் கடவுளை நம்ப மறுப்பதே நாத்திகம். இப்போதோ தன்னை நம்ப மறுப்பவனே நாத்திகவாதி. தன்னம்பிக்கையோடு இருப்பதே உண்மையான ஆத்திகம். 
*அன்பு காட்டுவதே செயல்களில் எல்லாம் சிறந்த செயல். யோகத்தை விட அன்பே மேலானது. தலைசிறந்த ஞானமும் அதுவே.
*உள்ளங்களை திறந்து வையுங்கள். பிரபஞ்சத்தில் உள்ள நல்ல எண்ணங்கள் அனைத்தும் நம்மை வந்து சேரட்டும்.
*நேர்மையான கோபம் என்று ஒன்று கிடையாது. பேராசையே கோபத்திற்கு அடிப்படைக் காரணம். அன்பு நெஞ்சத்தில் கோபத்திற்கு இடமே இருப்பதில்லை.
*அடக்கப்படாத மனம் மனிதனை எப்போதும் கீழ்நோக்கியே இழுத்துச் சென்று பாதாளத்தில் ஒருவனைத் தள்ளிவிடும்.
*பொன், பெண், மண் இவைகளுக்கு வசப்பட்ட அற்ப மனிதர்களைப் பொருட்படுத்தக் கூடாது.
*யாருடைய உள்ளம் ஏழை மக்களுக்காகத் துயரத்தில் ஆழ்ந்துவிடுமோ, அவரையே மகாத்மாவாக நான் வணங்குகிறேன்.
*வேடதாரியாகப் பொய் சொல்லி வாழ்வதை விட, உண்மை எங்கு இழுத்துச் சென்றாலும் தப்பில்லை என்று வாழ்வதே உயர்ந்தபண்பாகும்.
*முதலில் பணியாளனாக வேலை செய்யக் கற்றுக்கொள். எஜமானராக வாழும்தகுதி தானாக உன்னைத் தேடி வரும்.
*நன்மை விளையும் என்று உணர்ந்தால் மட்டுமே, மனதில் உள்ள அந்தரங்க விஷயங்களைப் பிறரிடம் சொல்லலாம்.
*பிறருக்காகச் செய்யும் சிறு முயற்சி கூட நமக்குள் இருக்கும் பேராற்றலைத் தூண்டி விடும்.
*தான் ஈடுபடும் எந்தப் பணியையும் தன் விருப்பத்திற்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்பவனே சிறந்த அறிவாளியாவான்.
*யாரிடமும் பொறாமை கொள்ளாதீர்கள். அனைவரையும் நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள். நன்மை செய்வோர் அனைவருக்கும் கைகொடுக்கத் தயங்காதீர்கள்.
*மனதை அடக்கப் பழகியவன் வேறு எதற்கும் எளிதில் வசப்பட மாட்டான். அத்தகையவன் சிறந்த அறிவாளியாகவும் திகழ்வான்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar