Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடுகபட்டியில் அம்மன் கோயில் உற்ஸவ ... புதுச்சேரி செங்கழுநீர் அம்மன் கோவிலில் 108 சங்கு அபிஷேகம் புதுச்சேரி செங்கழுநீர் அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2026
10:06

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆணி திருமஞ்சன தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.


கடலுார், சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழாவையொட்டி, இன்று காலை சித்சபைக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில் வேத மந்திரங்கள் ஓத, உற்சவ ஆச்சாரியார் ராஜு தீட்சிதர் கொடி மரத்தில் கொடியேற்றி வைத்தார்.


அதனைத் தொடர்ந்து நான்கு வீதிகளிலும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது. இதில் உள்ளூர், வெளியூர், வெளி மாவட்டம், வெளி மாநிலத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் குடும்பத்துடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.  நாளை 14ம் தேதி  சந்திர பிரபை வாகன வீதி உலா, நாளை 15ம் தேதி தங்க சூரிய பிரபை வாகன வீதிஉலா, 16ம் தேதி வெள்ளி பூதவாகன வீதிஉலா, 17ம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதி உலா நடைபெறுகிறது. வரும், 18ம் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலா,19ம் தேதி தங்க கைலாச வாகன வீதி உலா, 20ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலா நடைபெறுகிறது. தொடர்ந்து, 21ம் தேதி தேர் திருவிழா நடைபெறுகிறது. இதில் மூலவரான சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி அதிகாலை கோவிலில் புறப்பாடாகி வேத மந்திரங்கள் முழங்க, சிவ வாத்தியங்கள் ஒலித்தவாறு, கீழ சன்னதியில் உள்ள தேரில் எழுந்திருளி, பக்தர்களுக்கு காட்சி கொடுத்தவாறு நான்கு வீதிகளிலும் உலா நடைபெறுகிறது. இரவு 8:00 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏக கால லட்சார்ச்சனையும், 22ம் தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் காலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை சிவாம சுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகமும், நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து அன்று காலை 10:00 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா நடைபெற்ற பிறகு, பிற்பகல் 2:00 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. வரும், 23 ஆம் தேதி  பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்திருந்தனர். டிஎஸ்பி பிரதீப் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஆய்வாளர் சிவானந்தம் உள்ளிட்ட 100க்கும்  மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar