பதிவு செய்த நாள்
25
ஜன
2013
11:01
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வர சுவாமி கோவில் உள் ளது. மார்கண்டேயருக்காக சிவன் எமனை சம்ஹாரம் செய்த இத்தலத்தில் 60, 70, 80 வயது பூர்த்தியடைந்தவர்கள் திருமணம் செய்து கொள்வது வழக்கம் இ தனால் எம பயம் நீங்கும் என்பது ஐதீகம்.
இந்நிகழ்ச்சிகளில் கோவிலில் உள்ள அபிராமி என்ற பெண் யானைக்கு கஜ பூஜை செய்வது வழக்கம். திருப்பபனந்தாள் ஆதினம் எஜமான் முத்துக்குமார தம்பிரான் சுவாமிகளால் திருக்கடையூர் கோவிலுக்கு 4 வயதில் வழங்கப்பட்ட யானை அபிராமிக்கு தற்போது 26 வயது ஆகிறது. அபிராமி கடந்த நவம்பர் 26ம் தேதி யானைகள் புத்துணர்ச்சி முகாமிற்கு சென்று விட்டு கடந்த 13ம் தேதி திரும்பியது. வந்ததிலிருந்து அதன் உடல்நிலை பாதிக்கப்பட்டு உணவு உட்கொள்ளாமல் உடல் மெலிந்து எடை குறைந்தது. அதைதொடந்து அபிராமிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அபிராமியால் கோவிலில் நடக்கும் பூஜை களில் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்க ள் மிகுந்த கவலையடைந்தனர். அபிராமி விரைவில் குணமடைய வேண்டி பக்தர்கள் பிரார்த்தித்தனர்.
இந்நிலையில் அதிகாலை அபிராமி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தது. இதையடுத்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால், எம்.எல்.ஏ.பவுன் ராஜ் உட்பட ஏராளமான பக்தர்கள் காணிக்கை செலுத்தி தரிசனம் செய்தனர். தொடர்ந்து யானை அபிராமியின் உடலை யானை கொட்டகையிலிருந்து கிரேன் மூலம் வாகனத்தில் ஏற்றி கோவிலில் உள்ள நடன மண்டபத்தில் வைக் கப்பட்டு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்பு மேளவாத்தியத்துடன் அபிராமியின் உடல் நான்கு மாடவீதிகள் வழி யாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு யானைக்குளமருகில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் கண்ணீருடன் அபிராமிக்கு பிரியா விடை கொடுத்தனர். கோவில் யானை அபிராமி மரணமடைந்ததால் பூஜைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதுடன், சதாபிஷேகம் உள்ளிட்ட திருமணங்களும் நடத்தப்பட வில்லை, யானை அடக்கம் செய்யப்பட்ட பின்னரே பூஜைகள் நடத்தப்பட்டது.