Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிழப்பட்டு மாரியம்மன் கோவில் தேர் ... தஞ்சாவூர் பெரியகோயிலில் ஆஷாட நவராத்திரி; மஞ்சள் அலங்காரத்தில் மகா வாராஹி அம்மன் தஞ்சாவூர் பெரியகோயிலில் ஆஷாட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடிப் பெருந்திருவிழா; ஜூலை 18ல் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடிப் பெருந்திருவிழா; ஜூலை 18ல் துவக்கம்

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2026
11:07

சின்னமனூர்: குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடித் திரு விழா நாளை மறுநாள் ஜூலை 18 ல் துவங்குகிறது. திருப்பணிகள் நடந்து வருவதால் கொடியேற்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


தேனி மாவட்டம் குச்சனூரில் சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. தமிழகத்தில் சனீஸ்வர பகவானுக் சென்று தனிக் கோயில் வேறு எங்கும் இல்லை. சுயம்புவாக தோன்றிய இந்த கோயில் சுரபி நதி கரையில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது தனிச் சிறப்பாகும். ஆண்டுதோறும் ஆடி மாதம் பெருந் திருவிழா நடைபெறும். ஆடி மாதம் நான்கு சனிக்கிழமைகளில் நடைபெறும் திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் திரளாக பங்கேற்பார்கள். கோயிலில் திருப்பணி வேலைகள் நடப்பதால் கொடி மரம் அகற்றப்பட்டுள்ளது. எனவே அறநிலைய துறை திருவிழாவை கடந்த 2 ஆண்டுகளாக ரத்து செய்துள்ளது. ஐகோர்ட் உத்தரவுப்படி திருக்கல்யாணம் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆடி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையிலும் திருவிழா நடைபெறும். சனிக்கிழமைகளிக் அதிகாலை 4 மணியிலிருந்து பக்தர்கள் கூட்டம் வரத் துவங்கும். வழக்கமாக பக்தர்கள் , சுரபி நதியில் குளித்து, காக்கை வாகனம் வாங்கி விடுவது, எள்ளு, பொரி போன்றவற்றை படைப்பது உள்ளிட்ட நேர்த்தி கடன்களை செய்வார்கள். குறிப்பாக நான்காவது சனிக்கிழமை பெருந்திரு விழாவாக கொண்டாடப்படும், அன்று லட்சக்கணக்கில் மக்கள் கூடுவார்கள். கடந்த 2 ஆண்டுகளாக ரத்து செய்யப்பட்டுள்ள திருவிழா இந்தாண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் மலர் அலங்காரத்தில் சுவாமி சனீஸ்வர பகவான் அருள் பாலிப்பார். நீண்ட வரிசையில் நின்று பத்தர்கள் தரிசனம் செய்வார்கள்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar