கோதண்ட ராமசுவாமி கோயில் ஆனி பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2026 10:07
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி கோயிலில் ஆனி பிரம்மோற்ஸவ விழாவில் நேற்று கொடியேற்றம் நடந்தது.
ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட கோதண்டராம சுவாமி கோயிலில்ஜூலை 13 முதல் 23 வரை ஆனி பிரம்மோற்ஸவ விழா நடக்கிறது. நேற்று ராமர், சீதா, லட்சுமணன், ஆஞ்சநேயர் சுவாமிகளுக்குகாப்புக் கட்டியும், கோயில் கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. தீபாராதனையில்பக்தர்கள் பங்கேற்றனர். தினமும் காலையில் பல்லக்கு மற்றும்இரவில் சிம்மம், ஆஞ்சநேயர், சேஷ உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி உலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை 19ல் கோதண்டராம சுவாமி, சீதாதேவி திருக்கல்யாணம், ஜூலை 21ல் இரவு குதிரை வாகனம், ஜூலை 22 ல்தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் ஜூலை 23ல் தீர்த்தோற்ஸவம், இரவுதோளுக்கினியன் வாகனத்தில் சுவாமி எழுந்தருளலுடன் பிரம்மோற்ஸவவிழா நிறைவடைகிறது.