Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் ... சீர்காழி சாரடி மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு அபிஷேகம் சீர்காழி சாரடி மாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வனபத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.5.38 கோடியில் வசந்த மண்டபம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வனபத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.5.38 கோடியில் வசந்த மண்டபம்

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2026
05:07

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், 5.38 கோடி ரூபாய் செலவில் வசந்த மண்டபம் கட்டும் பணிகள் துவங்க உள்ளதை அடுத்து, கொடி மரம் அகற்றும் பணிகள் துவங்கின.


மேட்டுப்பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஏழு நிலை ராஜகோபுரத்தில் சுதைகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. மஹா மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவை கட்ட, 5.38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கருவறை, மகா மண்டபம் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. 80 அடி நீளத்திலும், 60 அடி அகலத்திலும் வசந்த மண்டபம் கட்டும் பணிகள் துவங்க உள்ளது. இந்த இடத்தில் உள்ள கொடிமரத்தை அகற்ற கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. கொடி மரத்தை சுற்றி உள்ள செம்பு கவசங்களை அகற்றும் பணிகள் துவங்கின. அப்போது கோவில் உதவி கமிஷனர் (பொறுப்பு) சரவணன், கோவை இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் உஷா நந்தினி, ஆய்வாளர் ஹேமலதா மற்றும் கோவை மாவட்ட கோவில் நகைகள் சரிபார்க்கும் குழுவினர் ஆகியோர் உடன் இருந்தனர். 


இதுகுறித்து கோவில் உதவி கமிஷனர் சரவணன் கூறுகையில்," வனபத்ரகாளியம்மன் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. வசந்த மண்டபம் கட்டும் பணிகள் நடைபெற உள்ளதை அடுத்து, அந்த இடத்தில் உள்ள கொடிமரம் அகற்றப்பட உள்ளது. மண்டபம் கட்டி முடிக்கும் போது, புதிய கொடி மரம் அமைக்கப்படும்," என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar