மழை வளம், மகாமகம் சிறப்பாக நடைபெற வேண்டி கும்பகோணத்தில் மகா யாகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2026 11:07
தஞ்சாவூர்; உலக நலன், எல் நினோ உள்ளிட்ட காலநிலை மாற்றங்களால் ஏற்பட்டுள்ள கடும் வெப்பத்தின் தாக்கம் குறையவும், பருவமழை பொழிந்து நீர்நிலைகள் நிரம்பவும், விவசாயம் செழிக்கவும், காவேரி நதி வளம் பெருகவும், கும்பகோணம் மகாமகம்–2028 எந்தவித அசம்பாவிதமும் இன்றி சிறப்பாக நடைபெறவும், மகாமக விழாவை தேசிய திருவிழாவாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என அகில பாரத இந்து மகா சபா சார்பில் "காவேரி ஆகர்ஷண வருண மந்திர ஜப மகா யாகம்" கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் அமைந்துள்ள அபி முகேஸ்வரர் கோவிலில் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அகில பாரத இந்து மகா சபா தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ராம நிரஞ்சன், மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், ஸ்ரீ ஸ்ரீ சங்கர தீர்த்த சுவாமிகள், ஸ்ரீ சங்கர நாராயண பீடம் கலந்து கொண்டு வேத மந்திரங்களுடன் யாகத்தை நடத்தினார். அபி மகேஸ்வரர் கோவிலில் யாகம் மற்றும் வேள்விகளில் பங்கேற்பது ஆயிரம் திருத்தலங்களில் யாகம் செய்ததற்கான புண்ணிய பலனை அளிக்கும் என்பது ஐதீகம்.