திருச்செந்தூர் அகத்தியர் கோவிலில் சிறப்பு வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜன 2013 11:01
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அகத்தியர் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் நடந்தது. தை பௌர்ணமியை முன்னிட்டு 26ம் தேதி இரவு சிறப்பு வழிபாடு நடந்தது. திருச்செந்தூர் சன்னதி தெருவிலுள்ள அகத்தியர் கோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு இரவு அகத்திய பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது.அதன்பின்னர் அகத்தியர் நாம வழிபாடு,தீபவழிபாடு,திருமுறை பாராயணம் மற்றும் மகேஷ்வர பூஜை ஆகியன நடைபெற்றது.அதனைத்தொடர்ந்து திருச்செந்தார் டவுண் பஞ்.,தலைவர் சுரேஷ்பாபு தைப்பூச அன்னதானத்தை தொடக்கி வைத்தார்.நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி போக்குவரத்து துணை ஆணையர் பாலன் தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில் திருச்செந்தூர் சைவவேளாளர் ஐக்கிய சங்க இயக்குநர் பேராட்சி பேச்சிமுத்து, தேமுதிக ஒன்றிய செயலர் செந்தில்குமார், தொழிலதிபர் ராஜா, வேல்ராமகிருஷ்ணன், ஐயப்பா சேவா சங்க பொறுப்பாளர் மணிகண்டன், மத்திய கூட்டுறவு வங்கி உதவி மேலாளர் நமச்சிவாயம், பேரூராட்சி சுகாதாரபணியாளர்கள் கூட்டுறவு சிக்கண நாணய சங்க செயலர் செந்தில் ஆறுமுகம், சடகோபால், தனுஷ் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பொதிகை மலை புனித யாத்திரை குழுவினர் மற்றும் செந்தில் பொதிகை ஸ்ரீஅகத்தியர் சன்மார்க் சங்கத்தினர் செய்திருந்தனர்.