Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரெகுநாதபுரத்தில் ஆடி 18 பெருக்கு ... அலங்காநல்லுாரில் அம்மனுக்கு வளைகாப்பு அலங்காநல்லுாரில் அம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திர ரத கவி கல் இடிப்பு பக்தர்கள் அதிர்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திர ரத கவி கல் இடிப்பு பக்தர்கள் அதிர்ச்சி

பதிவு செய்த நாள்

04 ஆக
2026
12:08

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருப்பணி என்ற பெயரில் தேர் வடிவிலான திருஞானசம்பந்தரின் பாடல் இடம்பெற்ற மார்பிள் கல் (சித்திரரத கவி கல்) இடிக்கப்பட்டது பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இக்கோயில் கும்பாபிஷேகம் செப்., 17 நடக்கிறது. திருப்பணிகள் நடக்கும் நிலையில் 2018 பிப்.,2ல் தீப்பற்றிய கோயில் வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணி முடிக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தையொட்டி பசுபதீஸ்வரர் சன்னதி உள்ளது.

இச்சன்னதி பகுதியில் திருஞானசம்பந்தர் அருளிய திருஏழுகூற்றிருக்கையின் சித்திர கவி, தேர் வடிவில் மார்பிள் கல்லில் செதுக்கப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது. திருப்பணி என்ற பெயரில் சித்திரரத கவி மார்பிள் கல்லையும், அருகில் உள்ள சுவரையும் இடித்து விட்டதாக ஹிந்து அமைப்புகள் குற்றச்சாட்டுகின்றன.

ஆலயம் காப்போம் ஒருங்கிணைப்பாளர் தினகரன் கூறியதாவது: எதற்காக, யார் இதை உடைத்தார்கள் என்பது குறித்து விசாரிக்க வேண்டும். திருப்பணி என்ற பெயரில் பழமைகளை சிதைப்பது கண்டிக்கத்தக்கது. அம்மன் சன்னதியில் அதிக டன் கொண்ட ‘ஏசி’ வசதி செய்யப்பட்டுள்ளது.

இது அந்த மண்டபத்தின் கருங்கற்களை பாதிக்கும்.

இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். ஆடி வீதிகளில் கோயில் கட்டுமானத்தை பாதிக்கும் வகையில் ‘ஹைமாஸ்’ விளக்கு பொருத்த பள்ளம் தோண்டப்பட்டு இரும்புத்துாண் ஊன்றப்பட்டுள்ளது. ‘பக்தர்களின் வசதிக்காக’ என்றுக்கூறி, கோயிலின் பாதுகாப்பையும், பழமையையும் சிதைப்பதை ஏற்க முடியாது என்றார்.

கோயில் தரப்பில் கேட்டபோது, ‘‘வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணிக்காக துாண்கள் கொண்டு வருவதற்காக சுவர் உடைக்கப்பட்டது. விரைவில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும். தேர் வடிவிலான சித்திர கவியும் புதிதாக அமைக்கப்படும்,’’ என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar