செஞ்சி சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் பவித்ரோட்சவம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2026 10:08
செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் பவித்ரோட்சவம் நடந்தது. செஞ்சி அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் மூன்று நாள் பவித்ரோட்சவம் 2ம் தேதி காலை 9 மணிக்கு துவங்கியது. அன்று காலை உற்சவருக்கு விசேஷ திருமஞ்சனம் செய்து, பவித்ர மாலை அணிவித்தனர். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு விசேஷ யாகம் நடந்தது. நேற்று மதியம் மகா பூர்ணாஹூதியும், மகா தீபாரதனையும், பக்தர்களுக்கு பிரசாத வினியோகமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.