ஆடி கிருத்திகை; அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் தங்க தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2026 11:08
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் தங்கத் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
ஆடி கிருத்திகையை முன்னிட்டு, அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று காலை முருகப்பெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேக பூஜையும் மதியம் அலங்கார பூஜையும் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு, கருமத்தம்பட்டி, ராயர் பாளையத்தைச் சேர்ந்த வேலவன் காவடி குழுவினரின், காவடியாட்டம் நடந்தது. உச்சந்தலையில் காவடியை வைத்து சுழன்று சுழன்று ஆடிய பக்தர்கள் அனைவரையும் கவர்ந்தனர். இரவு 7:00 மணிக்கு தங்கத் தேரோட்டம் துவங்கி உள் பிரகாரத்தில் உலா வந்தது. தேரில் வள்ளி தெய்வானை உடனமர் முருகப்பெருமான் மின்னொளியில் பிரகாசமாக காட்சி தந்தார். அறங்காவலர் குழு தலைவர் நடராஜன், அறங்காவலர்கள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.