திருவோண பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு; நெய்யபிஷேகம் தொடங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஆக 2026 08:08
சபரிமலை; திருவோண பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. 28- ம் தேதி வரை நடை திறத்திருக்கும். நேற்று மாலை தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து 18 படிகளின் முன்புறமுள்ள ஆழியில் தீ வளர்க்கப்பட்டது. இரவு 10.00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
இன்று அதிகாலை 5.00 மணிக்கு நடை திறந்த பின்னர் நெய்யபிஷேகம் தொடங்கியது. பின்னர் வழக்கமான பூஜைகள் நடைபெறும். 26 - ம் தேதி திருவோண நாளில் பக்தர்களுக்கும் தேவசம் ஊழியர்களுக்கும் ஒண விருந்து வழங்கப்படும். கடந்த ஆண்டுகளில் தேவசம்போர்டு ஊழியர்கள் மற்றும் மேல் சாந்தி சார்பில் ஒண விருந்து நடைபெற்று வந்தது. ஆனால் இதன் பெயரில் நடைபெறும் பண வசூலை தடுப்பதற்காக திருவிதாங்கூர் தேவசம்போர்டு இந்த ஆண்டு முதல் நேரடியாக ஓண விருந்து வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.28-ம் தேதி இரவு 10.00மணிக்கு நடை அடைக்கப்படும்.