உலக நன்மைக்காக ராமேஸ்வரம் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஆக 2026 08:08
ராமேஸ்வரம்: உலக நன்மைக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் விவேகானந்தா கேந்திரம் சார்பில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.
உலக நன்மைக்காக நேற்று ராமேஸ்வரம் கோயில் 3ம் பிரகாரத்தில் விவேகானந்தா கேந்திரம் சார்பில் நடந்த 1008 திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்று மந்திரம் முழங்க திருவிளக்கு பூஜை செய்து சுவாமி தரிசனம் செய்தனர். இதில் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை விவேகானந்தா கேந்திரம் நிர்வாகி சரஸ்வதியம்மா, நிர்வாகிகள் செய்திருந்தனர்.