பழநி ஆயக்குடியில் வீரலட்சுமி கோயிலில் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஆக 2026 11:08
ஆயக்குடி: பழநி, ஆயக்குடியில் வீரலட்சுமி கோயில் திருவிழாவை முன்னிட்டு தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு செலுத்தினர்.
பழநி, ஆயக்குடியில் வீரலட்சுமி கோயில் உள்ளது. ஆக.14ல் ஆவணி திருவிழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடுதல்,சாமி சாட்டுதல் நடந்தது. ஆக.26 இரவு தீர்க்கும் தீர்த்தம் எடுத்துச் செல்லும் நிகழ்வு நடந்தது.சக்தி தேங்காய் உடைத்து, சேர்வையாட்டம் நடந்தது. அதன்பின் சுவாமி வீதி உலா வந்தது. அபிஷேகம் அலங்காரம் நடந்தது. நேற்று (ஆக.27) காலை பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி வழிபாட்டை துவங்கினர். கோயில் முன் பக்தர்கள் வரிசையாக அமர வைத்து கோவிந்தா கோஷத்துடன் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். அன்னதானம் நடந்தது ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.