தாமனூர் முனீஸ்வரன், அம்மச்சார் அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஆக 2026 10:08
செஞ்சி: செஞ்சி அடுத்த தாமனூர் முனீஸ்வரன், அம்மச்சார் அம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று காலை யாகசாலை பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. 9 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடந்தது. காலை 9:30 மணிக்கு முனீஸ்வரன் மற்றும் அம்மச்சார் அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழகினர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.