உடுமலை வாராஹி அம்மன் கோவிலில் ஆண்டு விழா; சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01செப் 2026 10:09
உடுமலை: சின்னவீரம்பட்டி வாராஹி அம்மன் கோவிலில், மூன்றாம் ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தது.
உடுமலை அருகே சின்னவீரம்பட்டியில், ஸ்ரீ சக்தி வாராஹி அம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலில், மூன்றாம் ஆண்டு விழாவையொட்டி, காலை, 7:00 மணி முதல் சிறப்பு ஹோமம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.