சிறுபாக்கம் வரதராஜ பெருமாள் கோவில் கிருஷ்ண ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04செப் 2026 05:09
சிறுபாக்கம்: சிறுபாக்கத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.
சிறுபாக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஶ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, இன்று காலை சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. ஶ்ரீ வரதராஜ பெருமாள், கிருஷ்ணர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, யாதவர்கள் உரி அடித்தல் மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சிகள் நடந்தது. ஏராளமான, கிராம பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.