Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலக்காடு கிருஷ்ண ஜெயந்தி விழாவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வேணுகோபாலன் ஜெயந்தி உற்சவம்
எழுத்தின் அளவு:
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வேணுகோபாலன் ஜெயந்தி உற்சவம்

பதிவு செய்த நாள்

04 செப்
2026
04:09

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வேணுகோபாலன் ஜெயந்தி உற்சவம் துவங்கியது.


திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வேணுகோபாலன் ஜெயந்தி விழா 10 நாட்கள் நடைபெறும். விழாவின் முதல் நாளான நேற்று காலை 5:00 மணிக்கு மூலவர் விஸ்வரூப தரிசனம், 8:00 மணிக்கு ருக்மணி சத்தியபாமா சமேத வேணுகோபாலன் முத்து பந்தல் விமானத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. பகல் 11:30 மணிக்கு விசேஷ அலங்கார திருமஞ்சனம், நான்காயிர திவ்ய பிரபந்த சேவை சாற்றுமறை நடந்தது. மாலை 5:30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் மற்றும் சந்தான கோபாலன் குழந்தை கண்ணனாக கொடி மரத்தில் எழுந்தருளி, ஜீயர் ஸ்ரீதேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள், சுவாமிக்கு சங்கு பால் சமர்ப்பிக்கும் வைபவம் நடந்தது. தொடர்ந்து ஆஸ்தானம் எழுந்தினர். இரவு 7:30 மணிக்கு ருக்மணி சத்தியபாமா சமேத வேணுகோபாலன் அம்ச வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 10ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் ஏஜென்ட் கோலாகலன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு திருநெல்வேலி எட்டெழுத்து பெருமாள் கோவிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு கோவை கணபதி வேணுகோபால சுவாமி கோவிலில் கடந்த 2ம் தேதி முதல் சிறப்பு ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்: ஆவணி கிருத்திகையை முன்னிட்டு தருமத்துப்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ... மேலும்
 
temple news
அன்னூர்: கிருத்திகையை முன்னிட்டு, அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று தங்கத்தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar